சைவம்

Cabbage Besan Sabzi Recipe In Tamil | Cabbage Besan Sabzi Recipe : முட்டைக்கோஸ் சப்ஜி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Cabbage Besan Sabzi Recipe : முட்டைக்கோஸ் சப்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

முட்டைக்கோஸ் காய்கறிகளில் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி. சிலருக்கு இதை பச்சையாக சாப்பிட பிடிக்கும். இன்னும் சிலருக்கு முட்டைக்கோஸ் என்றாலே பிடிக்காது. உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருக்கிறதா? வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டைக்கோஸை சமைத்துக் கொடுக்க நினைத்தால், முட்டைக்கோஸ் சப்ஜி செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் சப்ஜியை சாதத்துடனும் சாப்பிடலாம், சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* முட்டைக்கோஸ் – 3 கப் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

* கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டைக்கோஸ், வெங்காயம், கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் முட்டைக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கிளறி வேண்டும்.

* பிறகு நீரைத் தெளித்து மூடி வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* முட்டைக்கோஸ் வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கினால், முட்டைக்கோஸ் சப்ஜி தயார்.

இந்த பதிவின் மூலமாக Cabbage Besan Sabzi Recipe : முட்டைக்கோஸ் சப்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Cabbage Besan Sabzi Recipe : முட்டைக்கோஸ் சப்ஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment