சைவம்

Cheese Dosa Recipe In Tamil | Cheese Dosa Recipe : சீஸ் தோசை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Cheese Dosa Recipe : சீஸ் தோசை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதே கிடையாதா? என்ன செய்து கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்கிறார்களா? உங்கள் குழந்தைகள் சீஸை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு சீஸ் தோசை செய்து கொடுங்கள். இந்த சீஸ் தோசை மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் செய்வதும் சுலபம். முக்கியமாக இதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது.

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – தேவையான அளவு

* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் – தேவையான அளவு

* மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு (துருவியது)

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.

இந்த பதிவின் மூலமாக Cheese Dosa Recipe : சீஸ் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Cheese Dosa Recipe : சீஸ் தோசை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment