அசைவம்

Chettinad Sura Meen Kuzhambu Recipe In Tamil | செட்டிநாடு சுறா மீன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மீன் எடுக்க முடிவெடுத்துள்ளீர்களா?

தேவையான பொருட்கள்:

* சுறா மீன் – 500 கிராம்

* சின்ன வெங்காயம் – 15 (நறுக்கியது)

* பூண்டு – 5 பல் (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சோம்பு தூள் – 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 1/2 கப்

* புளி நீர் – 1/4 கப்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 3

செய்முறை:

* முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய மீனில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து, அதன் பின் புளி நீரை ஊற்றி நன்கு கிளறி, அதோடு 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் மீன் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு சுறா மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு சுறா மீன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment