சைவம்

Coconut Thattai Recipe | மொறுமொறுப்பான… தேங்காய் தட்டை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… தேங்காய் தட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அட்டகாசமான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், தேங்காய் தட்டை செய்து கொடுங்கள். இது மாலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது சாப்பிட அட்டகாசமாக இருக்கும் ஒரு ருசியான ஸ்நாக்ஸ். இந்த தட்டை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.

கீழே தேங்காய் தட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு – 2 கப்

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1 கப்

* வரமிளகாய் – 2

* மல்லி விதைகள் – 2 டீபூன்

* ஓமம் – 1/4 டீபூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதைகள், ஓமம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

* பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டையை தட்டையாக தட்டி, எண்ணெய் போட்டு பொன்னிறிமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், தேங்காய் தட்டை தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… தேங்காய் தட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… தேங்காய் தட்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment