அசைவம்

Egg Malai Masala Recipe | முட்டை மலாய் மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முட்டை மலாய் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, புல்கா, நாண் என்று எதையாவது செய்து சாப்பிடலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான மசாலா செய்யுங்கள். அதுவும் வித்தியாசமான முட்டை மசாலா செய்ய நினைத்தால், முட்டை மலாய் மசாலா செய்யுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* வெண்ணெய் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* முட்டை – 4

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

* பால் – 1 1/2 கப்

* பிரஷ் க்ரீம் – 1/4 கப்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 4

* பச்சை மிளகாய் – 2

மசாலா பொடிகள்…

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டையை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

* பின் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றம் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காய விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் பாலை ஊற்றி, வேண்டுமானால் சிறிது நீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் மூடியைத் திறந்து, அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, மூடியைத் திறந்து கிளறினால், சுவையான முட்டை மலாய் மசாலா தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக முட்டை மலாய் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முட்டை மலாய் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment