அசைவம்

Chicken Thoran Recipe | கேரளா சிக்கன் தோரன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கேரளா சிக்கன் தோரன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

புதன்கிழமை பலரது வீடுகளில் அசைவ உணவாக இருக்கும். அதிலும் சிக்கனை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக மட்டனுடன் ஒப்பிடும் போது இதன் விலை சற்று குறைவு.
மதியம் 10 நிமிடத்தில் ஒரு சுவையான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா சிக்கன் தோரன் சரியானதாக இருக்கும். இப்போது அந்த கேரளா சிக்கன் தோரனை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: சிக்கன் உப்பு கறி ரெசிபி

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/2 கிலோ

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* வர மிளகாய் – 6

* பூண்டு – 6-7 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் போட்டு நன்கு பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு கிளறி 10 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறக்க வேண்டும்.

* அதன் பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த வர மிளகாய் பூண்டு கலலையை சேர்த்து ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கிளறி, பின் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமானால் சுவைகேற்ப உப்பு தூவி, ஒருசேர நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* இறுதியில் மேலே 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலைத் தூவி பிரட்டினால், சுவையான கேரளா சிக்கன் தோரன் தயார்!

இந்த பதிவின் மூலமாக கேரளா சிக்கன் தோரன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கேரளா சிக்கன் தோரன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment