தியாக தீபம் லெப்கேணல் திலீபன்

Thileepan

“உருகுவது மெழுகு வர்த்தி அல்ல
தமிழரின் உள்ளக் கோயிலில் குடியிருக்கும்
ஒப்பற்ற தியாக தீபம்!
அங்கே…
பெருகுவது தமிழர் கண்ணீர் அல்ல..
எம் உயிரின் மூச்சு!”

thileepans

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்

திலிபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலிபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.  இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார்.

Lieutenant Colonel Thileepan

கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம், முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் இவைதாம்.

  • பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
  • புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  • வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987 செப்டம்பர் 15-ல் உண்ணாவிரதம் தொடங்கி, 12 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 12 நாள்களும் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தார் திலீபன். அதனால், அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு திலீபனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது.

 

திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில் அது தேவையா…

அன்று மேடையில் ஒலிவாங்கி பிடித்து பாடிக் கொண்டிருந்த போதே பதிவு செய்த பாடல் இது. விடுதலை பயணத்தின் அசைக்கமுடியா ஒரு ஆவணமாக இந்த பாடல் உள்ளது.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சுpந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெறியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது.

திலீபனின் இறுதி உரை

Lieutenant Colonel Thileepan

அந்த 12 நாள்களில் மூன்று முறை அவர் மக்களிடம் பேசினார். “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்.” என்றார். இதையேதான் அவர் மூன்று முறை பேசியபோதும் சொன்னார். ஆம், பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.

About the author

admin

Leave a Comment