சைவம்

Malai Paneer Recipe | மலாய் பன்னீர் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மலாய் பன்னீர் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வித்தியாசமாக சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் மலாய் பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இது சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக மலாய் பன்னீர் கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.

ஒருவர் பன்னீரை அடிக்கடி தங்கள் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கால்சியம் அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்

* பாதாம் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உலர்ந்த வெந்தய இலைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* க்ரீம் – 1/2 கப்

* உப்பு – தேவையான அளவு

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு நாக்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, அதை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரைப் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே சமயம், முந்திரி மற்றும் பாதாமையும் நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் கரம் மசாலாவைத் தவிர மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் தேவையான அளவு நீர் சேர்த்து, பன்னீரையும் போட்டு, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியில் அதில் உலர்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி போட்டு, கரம் மசாலாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மலாய் பன்னீர் கிரேவி ரெடி!

Image Courtesy

இந்த பதிவின் மூலமாக மலாய் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மலாய் பன்னீர் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment