சைவம்

North Indian Style Dried Peas Gravy Recipe In Tamil | வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி ரெசிப்பி (North Indian Style Dried Peas Gravy Recipe) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

 பட்டாணி கிரேவி

இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு வட இந்திய ஸ்டைல் சைடு டிஷ் எதையாவது செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டாணி கிரேவி செய்யுங்கள். இந்த பட்டாணி கிரேவி செய்வதற்கு வெங்காயம், தக்காளி எதுவும் தேவையில்லை, மசாலா பொடிகள் இருந்தாலே எளிதில் செய்யலாம். முக்கியமாக இந்த பட்டாணி கிரேவியை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

* காய்ந்த பட்டாணி – 1 கப்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பூண்டு – 4 பல் (தட்டியது)

* மஞ்சள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

Dried Peas Gravy Recipe செய்முறை:

* முதலில் காய்ந்த பட்டாணியை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஊற வைத்த பட்டாணியை குக்கரில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு பூண்டு பற்களை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள பட்டாணியை சேர்க்க வேண்டும்.

* பிறகு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி தயார்.

இந்த பதிவின் மூலமாக வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment