சைவம்

Oats Cutlet Recipe | மொறுமொறுப்பான… ஓட்ஸ் கட்லெட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… ஓட்ஸ் கட்லெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று. இதன் சுவை பலருக்கும் பிடிக்காது. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் கஞ்சி அவ்வளவு ருசியானதாக இருக்காது. ஆனால் இந்த ஓட்ஸ் கொண்டு மாலை வேளையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் ஓட்ஸ் கட்லெட். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.

இப்போது ஓட்ஸ் கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த ஓட்ஸ் – ஒரு கப்

* பன்னீர் – அரை கப்

* துருவிய கேரட் – 4 டேபிள் ஸ்பூன்

* வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒரு கப்

* இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கரம் மசாலா – அரை டீஸ்பூன்

* மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

* பச்சை மிளகாய் பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பெரிய பௌலில் ஓட்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், துருவிய கேரட், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பன்னீரை போட்டு நன்கு மாவு பதத்தை பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட் துண்டுகளை போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பாக ஓட்ஸ் கட்லெட் தயார்.

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… ஓட்ஸ் கட்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… ஓட்ஸ் கட்லெட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment