சைவம்

Roasted Potato Poriyal Recipe | ருசியான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மதியம் சாதத்திற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உருளைக்கிழங்கு பிரியரா? உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு எளிமையான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அது தான் உருளைக்கிழங்கு ரோஸ்ட். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு – 4

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி -சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் வரை நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பிறகு பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் நன்கு ரோஸ்ட்டாகும் வரை கிளறி விட வேண்டும். முக்கியமாக கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* அதன் பின் மேலே கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்தால், சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

Image Courtesy: naliniscooking

இந்த பதிவின் மூலமாக ருசியான… உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment