விளையாட்டு

கோலி அதிரடி ஆட்டம் | ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி அரை இறுதிக்கு தகுதி!

Virat Kohli:

அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். கவாஜா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து நெகராவிடம் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வார்னர் அஸ்வினிடம் அவுட் ஆனார். 44 ரன் எடுத்திருந்த ஃபென்ச் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழந்தார்

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் எடுட்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வழக்கம் போல தோணி அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார்

ஆட்ட நாயகன் விருதை கோலிக்கு வழங்கப்பட்டது

விராட் கோஹ்லி (Virat Kohli, About this soundஒலிப்பு (உதவி·தகவல்), பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார். மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் தனது பத்தொன்பதாவது வயதில் முதல் போட்டியான இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைக்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் மட்டையாளருக்கான தரவரிசையில் 2013 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தார்.[4] 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான பதுஅ உலக இருபது20 போட்டியின் தொடர்நாயகன் விருது பெற்றார்.

 

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago