Love

20 Best Love Quotes In Tamil | தமிழில் காதல் Quotes

love quotes
Written by admin

Best Love Quotes

Love quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for Love Quotes In Tamil for your loved one? Here I give the best Love Quotes In Tamil for your loved one

Best Love Quotes

நீ போகும் பாதையில் மட்டுமல்ல போகாத பாதையிலும் காத்துக் கிடக்கிறது உனக்காக என் மனசு

அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை எந்த உறவுக்கும் பிரிவு என்பதே இல்லை.

அழகானது பிடிக்கிறது என்பதை விட பிடித்ததினால் அழகாக தெரிகிறது என்பதே உண்மை.

என் அத்தனை சந்தோசத்துக்கும் உன் ஒற்றை புன்னகையே போதுமானதாக இருக்கின்றது.

அன்புக்காக தாகம் கொண்ட என் மனதிற்கு கிடைத்த அடை மழை நீ.

உலக அழகி பட்டமெல்லாம் உனக்கேதற்க்கு.. நீ உலகையே அழகாக்குபவள்.

நீயும் நானும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் என் அன்புக்கு சொந்தமான ஒரே உறவு நீ மட்டும் தான்.

என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சந்தோஷமும் நீ தான்.. பொக்கிஷமும் நீ தான்.

ஆறுதலாய் ஒரு வார்த்தை.. மௌனமாய் ஒரு முத்தம்.. அன்பாய் ஒரு அரவணைப்பு.. இது போதும் எனக்கு..

எனக்காக நீ இருக்கின்றாய் என்ற உணர்வே வாழ்க்கையை அழகாக்கி கொண்டிருக்கின்றது ஒவ்வொரு நொடியும்.

காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முடியும் வரை..

நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்

சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல.. நம் காதலை வளர்ப்பதற்கு..!

விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்.. உன் பார்வையின் பிடியிலிருந்து!

கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்…

மழை வந்து நின்ற பிறகும் செடிகள் வைத்திருக்கும் மழைத்துளிகளைப் போல என் அறை வைத்திருக்கிறது நீ வந்து போன பிறகும் உன்னை..!

இரண்டு இதயங்கள் இணைந்து தீட்டும் அழகான ஓவியமே காதல்

நான் வார்த்தை தேடி அலைந்த போது, வந்து கிடைத்த கவிதை நீ..!

தவமின்றி கிடைத்த வரம் நீ.. தவம் இருந்தாலும் கிடைக்காத வரமும் நீ..

உன்னை எப்போதும் இதயத்துக்கு ஒப்பிட மாட்டேன்.. ஏனென்றால், நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது..!

நீ உன் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கிறாய், நான் உன்னை பிடித்துவிடவேண்டும் என்ற உச்சத்தில் இருக்கிறேன். “இறங்கி வா இருவர் ஒன்றாவோம்”

நீ எவ்வளவு வெறுத்தாலும்.. திரும்ப வந்து பேசுவதற்கு காரணம்.. வேறு யாரும் இல்லாமல் அல்ல… உன்னை தவிர வேறு யாரும் வேண்டாம் என்பதனால்!

மழையைக் கண்டவுடன் நடனமாடும் மயிலைப் போல், உன்னைக் கண்டதும் நடனமாடுகிறது என் மனம்!

நான் உன்னை ரசிப்பதை அறிந்து செய்வதறியாமல் நீ செய்யும் செயல்களே, என் காதல் பொக்கிஷங்கள்!

மௌனமாக இருந்தாலும் வெளிப்பட்டு விடுகிறது, என்னுள் புதைக்கப்பட்ட உன் அன்பு!

என் காதல் தொகுப்பில் ஓர் எழுத்து கவிதை “நீ”

இந்த Love Quotes ஐ நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இதுபோன்ற பதிவுகள் பார்க்க Facebook பக்கங்களை லைக் பண்ணுங்க. எங்கள் பதிவை படித்தமைக்கு நன்றிகள் பல..!

About the author

admin

Leave a Comment