சைவம்

Butter Garlic Mushroom Recipe In Tamil | பட்டர் கார்லிக் மஸ்ரூம்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

புரட்டாசி மாதம் ஆரம்பமாகிவிட்டது. அசைவ பிரியர்களுக்கு இனிமேல் காளான் தான் அசைவ உணவை ஈடுகட்டும் வகையில் இருக்கும். சொல்லப்போனால் புரட்டாசி மாதத்தில் காளானை அநேக மக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள்.
இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸாக இருக்கும். இப்போது அந்த பட்டர் கார்லிக் மஸ்ரூமை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காளான் – 1 கப் (100 கிராம்)

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* துருவிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* உலர்ந்த மூலிகைகள் (ஓரிகானா அல்லது தைம்) – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் காளானை சுடுநீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்தது உருகியதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* பிறகு அதில் காளானை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும். காளான் நீர் விடும் என்பதால், நீர் வற்றும் வரை வேக வையுங்கள்.

* பின்பு அதில் மிளகுத் தூள் மற்றும் மூலிகைகளை சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள்.

* இறுதியில் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம் தயார்!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக பட்டர் கார்லிக் மஸ்ரூம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பட்டர் கார்லிக் மஸ்ரூம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment