அசைவம்

Brain Fry Recipe | செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் அசைவ பிரியரா?
ஆட்டு மூளை வறுவல் செய்வது மிகவும் சுலபம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்தால், மூளை சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவர். சரி, வாருங்கள் செட்டிநாடு ஸ்டைல் ஆட்டு மூளை வறுவலின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

தேவையான பொருட்கள்:

* ஆட்டு மூளை – 1

* சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* கொத்தமல்லி – சிறிது

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* கிராம்பு – 1

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஆட்டு மூளையை நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும். பின் மூளையில் உள்ள சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, மீண்டும் நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* இப்போது மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/4 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை போனதும், அதேப் போல் நீர் வற்றியதும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் தயார்.

குறிப்பு:

* ஆட்டு மூளை வேகமாக வெந்துவிடும். எனவே நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

* ஆட்டு மூளை மிகவும் மென்மையாக இருப்பதால், சமைக்கும் போது பார்த்து கையாளுங்கள்.

* மேலே மிதமான அளவில் தான் காரம் சேர்க்கப்பட்டுள்ளது.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment