நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
* சிக்கன் – 600 கிராம்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 /2 டீஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு…
* இஞ்சி – 1 இன்ச்
* பூண்டு – 6 பல்
* பட்டை – 1 இன்ச்
* கிராம்பு – 4
* ஏலக்காய் – 1
* கசகசா – 2 டீஸ்பூன்
* கொப்பரைத் தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் – 1/4 கப்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1/2 இன்ச்
* கிராம்பு – 3
* ஏலக்காய் – 1
* பிரியாணி இலை – 1
பிற பொருட்கள்:
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை – சிறிது
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதில் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களான, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ‘அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களான இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, கொப்பரை தேங்காய் சேர்த்து, சுடுநீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை சேர்த்து ஒரு 4-6 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு சிக்கன் மூழ்கும் வரை நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால் இதை குக்கரிலும் செய்யலாம். ஆனால் குக்கரில் செய்யும் போது, சிக்கன் வேக 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .