சைவம்

பால் பவுடர் பர்ஃபி – தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி | Diwali Special Milk Powder Burfi Recipe In Tamil

Milk Powder Burfi
Written by admin

Milk Powder Burfi

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பால் பவுடர் பர்ஃபி (Milk Powder Burfi ) – தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் செய்வதற்கு ஏற்ற பலகாரமும் கூட. பெரும்பாலும் கடைகளில் தான் இந்த பர்ஃபியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். சரி, இப்போது பால் பவுடர் பர்ஃபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் பவுடர் – 1 கப்

* பால் – 1/4 கப்

* பொடி செய்யப்பட்ட சர்க்கரை – 1/3 கப்

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

* நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

* குங்குமப்பூ – 4 சிட்டிகை

Milk Powder Burfi  செய்முறை:

* முதலில் ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்ற வேண்டும்.

* பின் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கெட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும். அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின் ஒரு அகலமான தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்ட லேசாக அழுத்தி விட்டு, 10-15 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.

* இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்!

இந்த பதிவின் மூலமாக பால் பவுடர் பர்ஃபி – தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பால் பவுடர் பர்ஃபி – தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment