சைவம்

Garlic Dal Recipe In Tamil | பூண்டு தால்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பூண்டு தால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகவும் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் துவரம் பருப்பு மற்றும் பூண்டு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான பூண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 1 கப்

* நெய் – 1 டீஸ்பூன்

* புளி பேஸ்ட் – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 5

* பூண்டு – 10 பல்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பை குளிர வைக்க வேண்டும்.

* அதற்குள் பச்சை மிளகாயை வாணலியில் போட்டு சிறிது வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில், வேக வைத்த பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, புளி பேஸ்ட், உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பருப்புடன் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பூண்டு தால் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக பூண்டு தால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பூண்டு தால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment