அசைவம்

Mutton Vegaya Masala Recipe In Tamil | மட்டன் வெங்காய மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மட்டன் வெங்காய மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

வார விடுமுறை நாட்களில் தான் விருப்பமான அசைவ உணவுகளை வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கும். அதுவும் மழை பெய்யும் போது அசைவ உணவுகளை சாப்பிட பலருக்கும் ஆசை எழும். நீங்கள் இந்த வாரம் மட்டன் வாங்க நினைத்தால், அதைக் கொண்டு மட்டன் வெங்காய மசாலா செய்யுங்கள். இந்த மட்டன் வெங்காய மசாலா சப்பாத்தி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு மட்டன் வெங்காய மசாலா அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 1/2 கிலோ

* தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

* சோம்பு – 2 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 4

* கிராம்பு – 4

* பிரியாணி இலை – 1

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1/2 கிலோ

* இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2

* தக்காளி – 3 (அரைத்துக் கொள்ளவும்)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.

* பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காய மசாலா தயார்.

இந்த பதிவின் மூலமாக மட்டன் வெங்காய மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மட்டன் வெங்காய மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment