சைவம்

Paneer Cheese Toast Recipe In Tamil | பன்னீர் சீஸ் டோஸ்ட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் சீஸ் டோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? உங்கள் குழந்தைகள் பிரட் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு வெறும் பிரட் கொடுப்பதற்கு பதிலாக, உங்கள் வீட்டில் சீஸ், பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான டோஸ்ட் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் சீஸ் டோஸ்ட் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பன்னீர் சீஸ் டோஸ்ட் ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருப்பது மட்டுமின்றி, காலை வேளையில் சாப்பிட ஒரு சிம்பிளான காலை உணவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 1 கப் (துருவியது)

* சீஸ் – 1/4 கப் (துருவியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* மயோனைஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* இத்தாலியன் சீசனிங் – 1 டீஸ்பூன்

* உலர்ந்த கற்பூரவள்ளி இலை / ஆரிகனோ – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

* பிரட் துண்டுகள் – 2-4

* வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் சில்லி ப்ளேக்ஸ், பிரட் மற்றும் வெண்ணெயைத் தவிர அனைத்தையும் எடுத்து நன்கு கலந்த கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் வெண்ணெயைத் தடவி, பன்னீர் கலவையை மேலே சமமாக பரப்பி, அதன் மேல் சிறிது சீஸ் தூவ வேண்டும்.

* அதன்பின் மேலே சில்லி ப்ளேக்ஸ் தூவ வேண்டும்.

* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயை தடவி, குறைவான தீயில் வைத்து பிரட் துண்டை வைக்க வேண்டும்.

* பிரட்டின் அடிப்பகுதி பொன்னிறமானதும், பிரட்டை திருப்பிப் போட்டு, சிறிது நேரம் வேக வைத்து எடுத்து இரண்டாக வெட்ட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், பன்னீர் சீஸ் டோஸ்ட் தயார்.

இந்த பதிவின் மூலமாக பன்னீர் சீஸ் டோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் சீஸ் டோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment