அசைவம்

Pichu Potta Kozhi Varuval Recipe | பிச்சுப்போட்ட கோழி வறுவல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பிச்சுப்போட்ட கோழி வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

கொரோனா பரவ ஆரம்பித்து, நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த பல மாதங்களாக லாக்டவுன் போடப்பட்டிருந்தது. இக்காலத்தில் பலரும் வீட்டிலேயே இருந்ததால், நம்மில் பலரும் சமையலைக் கற்றுக் கொண்டதோடு, தற்போது வீட்டிலேயே பல சுவையான ரெசிபிக்களை முயற்சிக்கவும் விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம் என்றே கூறலாம். அந்த வகையில் பலருக்கும் சிக்கன் பிடித்தமான இறைச்சியாகும். சிக்கனைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பிச்சுப்போட்ட கோழி வறுவல். இது செய்வது மிகவும் ஈஸி.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய சிக்கனை குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும், குக்கரைத் திறந்து, எலும்பில் உள்ள சிக்கனின் சதைப்பகுதியை கையால் பிய்த்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்னர் மிளகுத் தூளைத் தவிர, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேட்ணடும்.

* பின் சிக்கனைப் போட்டு நன்கு கிளறி, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பிச்சுப்போட்ட கோழி வறுவல் தயார்.

இந்த பதிவின் மூலமாக பிச்சுப்போட்ட கோழி வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பிச்சுப்போட்ட கோழி வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment