அசைவம்

Ramadan 2021 Special: Classic Indian Butter Chicken Recipe In Tamil | ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கன் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு சுவையான உணவுப் பொருள். இந்த சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகளைத் தயாரிக்கலாம். அதுவும் தற்போது ரமலான் நோன்பை பலர் மேற்கொள்வதுண்டு. சிக்கன் அனைவரும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் என்பதால், மாலை வேளையில் நோன்பை முடித்த பின் ஒரு சுவையான உணவை சமைத்து சாப்பிட நினைத்தால், அதற்கு கிளாசிக் இந்தியன் பட்டன் சிக்கன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

கீழே கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்

* தயிர் – 1/2 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – 1 டீஸ்பூன்

பட்டர் சிக்கன் மசாலாவிற்கு…

* பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* அரைத்த தக்காளி விழுது – 1 கப்

* தேன் – 1 டீஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 1/4 கப்

* உலர்ந்த வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை 4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின் அதே வாணலியில் அரைத்த தக்காளி விழுது, உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, சிக்கனை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதன் மேல் பிரஷ் க்ரீம், தேன் மற்றும்
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் உலர்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment