அசைவம்

Spicy Pepper Mutton Varuval Recipe | காரமான… பெப்பர் மட்டன் வறுவல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காரமான… பெப்பர் மட்டன் வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தற்போது பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பதால், பலருக்கும் சிக்கன் சாப்பிட அச்சமாக இருக்கலாம். அதற்காக நிறைய பேர் சிக்கனைத் தவிர்த்து மட்டனை வாங்குவார்கள்.
இப்போது பெப்பர் மட்டன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

* பட்டை – 1 துண்டு

* சோம்பு – 1 டீஸ்பூன்

* ஏலக்காய் – 4

* கிராம்பு – 4

* பிரியாணி இலை – 1

* வெங்காயம் – 3 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 4

* தக்காளி – 2 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* மட்டன் – 1 கிலோ

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 15

* கறிவேப்பிலை – ஒரு கையளவு

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

* பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

* பின்பு அதில் மட்டனைக் கழுவி போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு பத்து நிமிடம் வதக்கவும்.

* அடுத்து தக்காளியைப் போட்டு ஒருமுறை கிளறி, மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கிளறி, பச்சை மிளகாயைப் போட்டு, நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* விசில் போனாலும், குக்கரைத் திறந்து, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து, பத்து நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

* அதற்குள் மற்றொரு வாணலியில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து, பொடி செய்து கொள்ளுங்கள்.

* சின்ன வெங்காயம் வெந்த பின், அரைத்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியை மட்டனுடன் சேர்த்து தூவி கிளறி இறக்கினால், காரமான பெப்பர் மட்டன் வறுவல் தயார்.

IMAGE COURTESY: yummytummyaarthi

இந்த பதிவின் மூலமாக காரமான… பெப்பர் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காரமான… பெப்பர் மட்டன் வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment