செய்திகள் பட்டுக்கோட்டை செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை – தஞ்சாவூர் மாவட்டம்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் என்றும், அண்ணா பெயரில் உணவகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டவாரியாக நிறைவேற்றப்படும் திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

dmk-2

தஞ்சை மாவட்டத்திக்கான முக்கிய திட்டங்கள்

 • பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
 • பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
 • பட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட வணிக வளாகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் முழுநேர விவசாயிகள் பயிற்சி மையம் தொடங்கப்படும்.
 • பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் வர்ஜின் ஆயில் ஆலை தொடங்கப்படும்.
 • பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் தேங்காய் எண்ணெய் அரவை ஆலை அமைக்கப்படும்.
 • பட்டுக்கோட்டை வட்டம் கண்ணனாறு வடிகால் – வடவாறு நீட்டுவாய்க்கால் நீரேற்றுப் பாசனத் திட்டம் (லிப்ட் ) நிறைவேற்றப்படும்.
 • பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
 • பேராவூரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பட்டுக்கோட்டையும் சேர்க்கப்படும்.
 • மதுக்கூர் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.
 • சேதுபாவாசத்திரத்தில் இறால் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
 • மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட மனோரா சீரமைக்கப்பட்டு, சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும்.
 • அதிராம்பட்டினத்தில் உப்பு சார்ந்த காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும்.
 • மல்லிப்பட்டிணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
 • சேதுபாவாசத்திரத்தில் மீன் பிடி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
 • மாயனூர் புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் விரிவாக்கக் கால்வாய் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தஞ்சையில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்கப்படும்.
 • கல்லணை கால்வாய், காவிரி ஆறு, வெண்ணாறு மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.
 • தஞ்சாவூரில் இயற்கை வேளாண்மை மையம் அமைக்கப்படும்.
 • சோளகம்பட்டி, அயனாபுரம் ஆகிய இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
 • கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி செய்து தரப்பட்டு தரம் உயர்த்தப்படும்.
 • கும்பகோணம் அருகில் அண்ணலக்ரகாரம் – மாத்தி இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.
 • பாபநாசத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
 • உத்தமதானபுரத்திலுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டு, காப்பாளர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
 • தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்படும்.

About the author

admin

Leave a Comment