நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தக்காளி துளசி சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி அல்லது தோசை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு வித்தியாசமான, அதே வேளையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷன். நீங்கள் சட்னி பிரியராக இருந்தால், அதுவும் வித்தியாசமான சட்னியை சுவைக்க விரும்புபவரானால், தக்காளி துளசி சட்னியை செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி துளசி சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 6 பல்
* வரமிளகாய் – 6
* தக்காளி – 2 (நறுக்கியது)
* துளசி – ஒரு கையளவு
* புளி – ஒரு துண்டு
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு துளசி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான தக்காளி துளசி சட்னி தயார்.
இந்த பதிவின் மூலமாக தக்காளி துளசி சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தக்காளி துளசி சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .