அசைவம்

Varutharacha Mutton Kulambu Recipe In Tamil | வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் மட்டன் பிரியரா? மட்டனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவீர்களா? அப்படியானால் இன்று உங்களுக்காக ஒரு சுவையான மட்டன் ரெசிபியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தான் வறுத்தரைச்ச மட்டன் குழம்பு. இந்த மட்டன் குழம்பு சாதம், சப்பாத்தி, நாண், பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஏன் இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 1/2 கிலோ

* சின்ன வெங்காயம் – 15

* உருளைக்கிழங்கு – 1

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 1/2 கப்

வறுத்து அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* கிராம்பு – 3

* பட்டை – 1 இன்ச்

பிற பொருட்கள்:

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி, 8 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் வேக வைத்த மட்டனை நீருடன் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, எண்ணெய் மேலே மிதக்கும் அளவில் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வறுத்தரைச்ச மட்டன் குழம்பு தயார்.

Image Courtesy: happietrio

இந்த பதிவின் மூலமாக வறுத்தரைச்ச மட்டன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வறுத்தரைச்ச மட்டன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment