சைவம்

Aval Vadai Recipe In Tamil | அவல் வடை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான அவல் வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? நல்ல மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான அவல் வடை செய்து கொடுங்கள். இந்த அவல் வடை செய்வது மிகவும் சுலபம். இந்த வடை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

தேவையான பொருட்கள்:

* அவல் – 1 கப்

* அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* சீரகம் – 1 டீஸ்பூன்

* இஞ்சி – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அவலை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.

* பின் அதில் அரிசி மாவு, தயிர், வெங்காயம், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* ஒருவேளை கலவை மிகவும் ட்ரையாக இருந்தால், அதில் சிறிது நீர் தெளித்து உருண்டைகளாக வரும் பதத்தில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, வடை போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அவல் வடை தயார்.

குறிப்பு:

* வடைகளை எண்ணெயில் பொரிக்கும் போது, மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருகிவிடும்.

* வடைக்கான மாவை தயாரிக்கும் போது அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் வடை செய்ய முடியாது.

* அதேப் போல் உருண்டை பிடித்து தட்டும் போது மிகவும் இறுக்கமாக பிடிக்காமல் லேசாக பிடியுங்கள். இல்லாவிட்டால் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும்.

* தடிமனான அவல் பயன்படுத்துவதக இருந்தால், அதை நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக அவல் வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி அவல் வடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment