விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 கணக்கில் ஜெர்மனி வெற்றி : புதிய வரலாறு படைப்பது.

FIFA 20th world cup: பிரேசிலில் நடைபெற்ற 20–வது உலக கோப்பை கால்பந்து  இறுதிப் போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதின.

World Cup 2014

தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஜெர்மனி அணியும், 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் முயற்சியில் அர்ஜென்டினா அணியும் களம் இறங்கின.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியது என்பதால் இறுதிப்போட்டி மிகவும்  விறு விறுப்பாக நடைப்பெற்றது.  ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.

இரண்டாவது, பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி , அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது. 90 நிமிட முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

கூடுதல் நேரத்தின் 20 நிமிடத்தில்(113) ஜெர்மனியின் கோட்சே முதல் கோலை போட்டு அசத்தினார்.

Germany-won

இறுதியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றிபெற்றது

இதன் மூலம் முதல் முறையாக் தென் அமெரிக்கா கண்டத்தில் வெற்றிபெற்ற ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த அணி என்ற வரலாற்று சாதனையை  ஜெர்மனி படைப்பது.

About the author

admin

Leave a Comment