செய்திகள்

50 ஆண்டுகளில் என்ன செய்தார் கலைஞர்?

கலைஞர் திமுக விற்கு தலைமை பதவியேற்று 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை நலிவுற்றுள்ளார் இந்நிலையில் கலைஞர் மீது பல அவதூறுகளையும் அவர் இறப்பை பற்றி பலர் எள்ளி நகையாடுகின்றனர். அவர்களுக்காக இந்த ஒரு சிறு தொகுப்பு… இதுவரை கலைஞர் செய்த நலத்திட்டங்கள் (எனக்கு தெரிந்தவை மட்டும்…)

  • 1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
  • 2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
  • 3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
  • 4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
  • 5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
  • 6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
  • 7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்
  • 8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்
  • 9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்
  • 10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
  • 11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
  • 12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
  • 13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்
  • 14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
  • 15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC – 31%, SC – 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
  • 16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்
  • 17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
  • 18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
  • 19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்
  • 20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்
  • 21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
  • 22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
  • 23. கோவில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம்” தந்தது கலைஞர்
  • 24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
  • 25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
  • 26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்
  • 27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்
  • 28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்
  • 29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்
  • 30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்
  • 31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
  • 32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்
  • 33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
  • 34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்
  • 35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்
  • 36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்
  • 37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
  • 38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
  • 39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
  • 40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
  • 41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
  • 42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
  • 43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
  • 44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
  • 45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
  • 46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்
  • 47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
  • 48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
  • 49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
  • 50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
  • 51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்
  • 52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
  • 53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
  • 54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
  • 55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
  • 56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்
  • 57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்
  • 58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்
  • 59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
  • 60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்
  • 61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்
  • 62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்
  • 63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்
  • 64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்
  • 65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்
  • 66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்
  • 67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்
  • 68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்
  • 69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்
  • 70. சத்துணவில் முட்டை, கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்
  • 71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்
  • 72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)
  • 73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல்
    கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)
  • 74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.
  • 75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால்
    கொலைபழியை சுமந்தது கலைஞர்.
  • 76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னபோது, கழகத்தின் மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் கலைஞர்
  • 76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.
  • 77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .
  • 78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர்!
  • 79. தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் கொண்டுவந்தவர் கலைஞர்!
  • 80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர்!
  • 81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர்!
  • 82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர்!
  • 83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கலைஞர்.
  • 84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர்!(அதை அழித்தவர் ஜெயலலிதா)
  • 85. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தியவர் கலைஞர்!
  • 86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University)
  • 87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
  • 88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
  • 89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
  • 90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.
  • 91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)
  • 92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)
  • 93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
  • 94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
  • 95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள்
    போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின…
  • 96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
  • 97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மேம்பாடு.
  • 98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.
  • 99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
  • 100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
  • 101. 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
  • 102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
  • 103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
  • 104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.
  • 105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
  • 106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.
  • 107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
  • 108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள்,
    நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..
  • 109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
  • 110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.
  • 111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.
  • 112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..
  • 113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன
  • 114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி செயல்படுத்தியது கலைஞர்
  • 115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் “பவானி அத்திக்கடவு திட்டம்” என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியவர் கலைஞர்
  • 116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம்,
    அண்ணா நூற்றாண்டு நூலகம்…. இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..
  • 117. செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா…. இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்…
  • 118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள்
    துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக…
  • 119. சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை
    கொண்டுவந்ததும் திமுகதான்…
  • 120. பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில்
    வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல்
    உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..
  • 121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை
    மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..
  • 122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்…
    தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக
    ஆட்சி.. அதின் காரணமாக, இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு..
    GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ் நாடு
    முன்னிலை வகிக்கிறது..
  • 123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது
    திமுக ஆட்சியில்..
  • 124. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று
    குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..
  • 125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம்
    ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு
    பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்..

இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்…

உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது…

இதுமட்டும் இல்லாமல் இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதில் பல்வேறுகட்டத்தில் கலைஞர் முக்கிய பங்குவகித்தார்…

கலைஞரை விமர்சனம் செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை அதற்க்கு முன் அவர் என்ன செய்தார் என்பதையும் தெரிந்துகொள்வோம். நாகரியமான அரசியல் படைப்போம்… கலைஞர் மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து வாழும்! வரலாறு படைக்கும்!!

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago