You Are Here: Home » தமிழகம் » கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்-ஸ்டாலின்

கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்-ஸ்டாலின்

karunanidhi health good

கருணாநிதி நலமுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நலமுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது செயல்தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

MK Stalin

கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, க.அன்பழகன், ஆ.ராசா உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லம் சென்று சந்தித்தனர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்றார்.

கருணாநிதி சிரித்து பேசினார் என்று வீராசாமி கூறினார். புகைப்படம் வெளியீடு கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின். கருணாநிதியுடன் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், வீராசாமி ஆகியோர் உடனிருக்கின்றனர்.

ஆரோக்கியமாக இருக்கிறார்

கருணாநிதி நலமுடன் இருப்பதாக துரைமுருகன் கூறினார். இது திருஷ்டி என்றும் தினசரி அவருக்கு ஆயுள் கூடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். அவர் பேசினாலும், பேசாவிட்டாலும் அவரைப்பற்றியே அனைவரும் பேசி வருவதாக துரைமுருகன் கூறினார்.

 

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top