ருசியான மதிய உணவு வெஜிடபிள் புலாவ் | காய்கறி புலாவ் | Vegetable Pulau
Vegetable Pulau: பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு சூப்பரான மதிய உணவு கொண்டு போக நினைத்தால் வெஜிடபிள் புலாவ் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்
வெஜிடபிள் புலாவ் (Vegetable Pulau) செய்முறை:
காலிஃப்ளவரை, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், உருளைக் கிழங்கை தோல் உரித்து க்யூப்களாக கட் செய்து கொள்ளவும். கேரட், பீன்ஸ் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு பல் லை திக்கான பேஸ்ட் பதத்தில்
அரைத்துக்கொள்ளவும்.
எண்ணெய் ஒரு கடாயில் ஊற்றி, காய்ந்ததும் ! லவங்கம், பட்டை, ஏலக்காய், வெங்காயம், புதினா போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை இத்துடன் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை வதக்கவும். பின் அதனுடன் அரிசி, காய்கறிகள், தேவையான அளவு உப்பு, 1க்கு இரண்டு நீர் சேர்த்து மூடி வைக்கவும்,
மிதமான தீயில் இக் கலவையை வைக்கவும். நீரைக்கிரகித்து, காய்கறிகளும், அரிசியும் வெந்தவுடன்
தம்மில் வைக்கவும் சுவையான காய்கறி புலாவ் தயாராகிவிடும்.
சூப்பரான, ருசியான வெஜிடபிள் புலாவ் ரெடி.