பட்டுக்கோட்டை செய்திகள்

பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி. ஆசிரியர்கள் வலியுறுத்தல்(College in Pattukottai)

Pattukottai

Pattukottai: பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாகை ஞானசேகரன், திருவாரூர் ஜெயந்தி, தஞ்சை மாரிமுத்து, பட்டுக்கோட்டை துரைராஜ், நாகை தஞ்சைமணி, தஞ்சை ரெங்கநாதன், திருவாரூர் தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர்.

Pattukkottai

பட்டுக்கோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி

  • கூட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் குறைந்தது 2 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும்.
  • காரைக்குடி – திருவாரூர் அகல ரயில்பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
  • பட்டுக்கோட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்.
  • 6வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து 7வது ஊதியக்குழுவை விரைந்து அமல்படுத்த வேண்டும்

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக தஞ்சை ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார்.முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

 

About the author

admin

Leave a Comment