சைவம்

How To Prepare Milk Cake Baklava | டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!!

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும்.

இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம்.

உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃப் விஷால் அட்ரியா மற்றும் செஃப் ஜேடபிள்யூ மாரிடேட் இருவரும் இணைந்து விழாக்கள் சமயத்தில் செய்யும் ரெசிபி ஆகும்.

இங்கே நாம் இந்த மில்க் கேக் பக்லவா எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

Recipe By: செஃப் விஷால் அட்ரியா, செஃப் ஜேடபிள்யூ மாரிடேட்

Recipe Type: டிசர்ட்

Serves: 12 பேர்கள்

ப்லோ சீட் – 10

மில்க் கேக் – 7-8 துண்டுகள்

நறுக்கிய பிஸ்தா பருப்புகள் – 1/2 கப்

உருக்கிய தெளிவான வெண்ணெய் – 3/4 கப்

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

ரோஸ் வாட்டர் – 5-6 டேபிள் ஸ்பூன்

முதலில் பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொள்ள வேண்டும்

மடிக்காத ப்லோ சீட்டை எடுத்து கொள்ளவும்

இப்பொழுது இந்த ப்லோ சீட்டை பேக்கிங் ட்ரேயில் விரிக்க வேண்டும்

இப்பொழுது வெண்ணெய்யை கொண்டு ப்லோ சீட்டின் மீது தடவ வேண்டும்.

ஒரு பெரிய பெளலை எடுத்து அதில் மில்க் கேக்கை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் பிஸ்தா பருப்பை சேர்க்கவும்

உதிர்த்த மில்க் கேக் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக கலக்கவும்.

இப்பொழுது பெளலில் உள்ள கலவையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து பேக்கிங் ட்ரேயில் பரப்ப வேண்டும்.

மறுபடியும் ஒரு ப்லோ சீட்டை அதன் மேல் வைத்து வெண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும். அப்புறம் மில்க் கேக் மற்றும் பிஸ்தா கலவையை பெளலில் இருந்து எடுத்து இன்னொரு லேயர் பரப்ப வேண்டும். இப்பொழுது இன்னொரு ப்லோ சீட்டை எடுத்து அதன் மேல் வைத்து வெண்ணெய்யை அதில் தடவவும்.

இப்படி லேயர் லேயராக 10 ப்லோ சீட்டுகள் வரை பயன்படுத்த வேண்டும்.

பத்தாவது ப்லோ சீட் வைக்கும் போது பாஸ்ட்ரியை சற்று அழுத்தி சமமாக இருக்கும் படி செய்யவும்.

இப்பொழுது வெண்ணெய்யை எடுத்து கடைசி ப்லோ சீட்டில் பரப்ப வேண்டும்.

இதை ப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1மணி நேரம் குளிர்விக்க வேண்டும். பிறகு அதை எடுத்து அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கனசதுர வடிவத்தில் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

பிறகு பேக்கிங் ட்ரேயை 180 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.

இந்த இடைவேளை நேரத்தில் அடுப்பில் ஓரு கடாயை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

இப்பொழுது சூடான கடாயில் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

பிறகு தண்ணீர் சேர்க்கவும்

நன்றாக சிரப்பை கொதிக்க விடவும். ஒரு மிதமான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

பிறகு ஓவனிலிருந்து ட்ரேயை எடுத்து விடவும்.

இப்பொழுது பேக்கிங் செய்யப்பட்ட கலவை பக்லவா என்று பெயர்.

இப்பொழுது காய்ச்சிய சர்க்கரை சிரப்பை பக்லவா மேல் ஊற்றி பரப்ப வேண்டும்.

இப்பொழுது பக்லவா கேக் துண்டுகளை ட்ரேயில் இருந்து எடுக்கவும்.

சுவையான பக்லவா கேக் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

டேஸ்டியான பக்லவா கேக் இப்போ வீட்டிலேயே ரெடியாச்சு.

இந்த பதிவின் மூலமாக டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment