நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் புர்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இரவு சப்பாத்தி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் புரோட்டீன் நிறைந்த பன்னீரைக் கொண்டு ஒரு அற்புதமான பன்னீர் புர்ஜி செய்யுங்கள். இந்த பன்னீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை செய்வதற்கு பன்னீர் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. குறிப்பாக பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் என்பதால், பன்னீர் புர்ஜி செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 200 கிராம் (துருவியது)
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, வேண்டுமானால் சிறிது மல்லித் தூளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நீரைத் தெளித்து கிளறி, ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக பன்னீர் புர்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் புர்ஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .