பட்டுக்கோட்டை செய்திகள்

பட்டுக்கோட்டை தெருக்கூத்து மூலம் நேரடி நெல் விதைப்பு முகாம் – குறைந்த நீர், செலவு. அதிக மகசூல்.

நேரடி நெல் விதைப்பு

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தெருக்கூத்து மூலம் நேரடி நெல் விதைப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது காலதாமதமாகி வருகிறது. அவ்வப்பொழுது பெய்து வரும் பருவமழை நீரை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் புழுதி உழவு மேற்கொண்டு நேரடி நெல்விதைப்பு செய்யக்கோரி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் வரும் 29ம் தேதி வரை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் நேற்று (05/10/2017) நேரடி நெல் விதைப்பு செய்ய முனைப்பு இயக்கம் நடந்தது. அப்போது தெருக்கூத்து மூலமாக நேரடி நெல் விதைப்பு செய்வதன் முக்கியத்துவம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசனத்தின் நன்மை, மண்வள அட்டையின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தனர்.

இதேபோல் துவரங்குறிச்சி தெற்கு, சேண்டாக்கோட்டை, கொண்டிகுளம், கார்காவயல், நம்பிவயல், திட்டக்குடி, ஆத்திக்கோட்டை, அணைக்காடு ஆகிய கிராமங்களில் முனைப்பு இயக்கம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர், வேளாண்மை அலுவலர்கள் மாலதி, சங்கீதா, வேளாண்மை உதவி அலுவலர்கள் ரீகன், சித்ரா, ரமணி, ராஜ்குமார், ஜெயபாரதி, ராமன் பங்கேற்றனர்.

நேரடி நெல் விதைப்பு

Direct paddy seeding

தமிழ்நாட்டில் தற்பொழுது பருவமழை பரவலாக தொடங்கியுள்ள சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்கள் புரட்டாசி பட்டத்தில் நேரடி நெல் விதைப்பையே தேர்வு செய்து மானாவாரியில் பயிரிடுகின்றனர். பெரும்பான்மையான விவசாயிகள் புரட்டாசி பட்டத்தில் நெல்லை சாகுபடி செய்வதற்கு டிராக்டர் இயந்திரம் கொண்டும், நாட்டுக்கலப்பையைக் கொண்டும் விதைப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு விதைப்பு செய்வதற்கு கால்நடைகள் மற்றும் கூலித் தொழிலாளர்களையே பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் கால்நடைகள் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக காலம் தாழ்த்திப் பயிர் செய்வதால் நெல்லை வறட்சி தாக்கும் சூழ்நிலை உருவாவதுடன், மகசூல் குறைவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இம்முறையில் நெல்லை சாகுபடி செய்வதால் அதிகமான விதைகள் தேவைப்படுவதோடு மட்டுமின்றி, முறையற்ற பயிர் இடைவெளியின் காரணமாக உழவியல் நடைமுறைகளை சுலபமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதில்லை. மேலும் அதிகமான பயிர்நெருக்கத்தின் காரணமாக பயிர்களுக்கிடையே நீர், உரம் மற்றும் சூரிய ஒளிக்கான போட்டி ஏற்பட்டு, மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

குறைந்த செலவில் அதிக மகசூல்

மேற்கூறிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செட்டிநாட்டில் நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் பயிர் செய்வது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதைப்புக்கருவியின் மூலம் குறைந்த செலவில், குறைந்த வேலையாட்களைக் கொண்டு ஓரு ஏக்கர் நிலத்தை 45 நிமிடங்களில் விதைப்பு செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.500/- வீதம் மிச்சப்படுத்தலாம்.

Rice-cultivation

இக்கருவியைக் கொண்டு பயிர் செய்யும் போது சுமார் 40 மூட்டை விதைகளை நாம் மிச்சப்படுத்த முடியும். இக்கருவியைக் கொண்டு விதைக்கும் போது பயிர்களுக்கிடையே சரியான இடைவெளி (25 x10 செ.மீ.) பராமரிக்கப்படுவதால் பயிர் போட்டியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பயிர்களுக்கு சீரான விகிதத்தில் சத்துகள் கிடைக்க வழிவகை செய்வதுடன், அதிக மகசூல் கிடைக்கவும் உதவுகின்றது. இம்முறையால் வயலில் இருந்து குறைந்த மீத்தேன் வாயு வெளியீடு, குறைந்த வேலையாட்கள் தேவை மற்றும் பயிர்கள் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகி நடவுப் பயிரைக் காட்டிலும் அதிக மகசூலைத் தருகிறது.

The Mandava weeder

நேரடி நெல் விதைப்பு : ஓர் ஒப்பீடு

விபரம் கைவிதைப்பு நாட்டுக்கலப்பை கொண்டு விதைத்தல் விதைப்பு கருவி மூலம் விதைத்தல்
ஆகும் நேரம் 1 மணி நேரம் 5 மணி நேரம் 45 நிமிடங்கள்
விதையளவு 35 கிலோ 35 கிலோ 15 கிலோ
தேவைப்படும் ஆட்கள் 1 2 1
செலவு(ரூபாய்) 1000 1200 600

நெல் சாகுபடியில் நடவு முறை : ஓர் ஒப்பீடு

விபரம் நடவு முறை இயந்திர நடவு முறை திருந்திய நெல் சாகுபடி
ஆகும் நேரம் 8 மணி நேரம் 2 மணி நேரம் 8 மணி நேரம்
விதையளவு 30 கிலோ 15 கிலோ 3 கிலோ
தேவைப்படும் ஆட்கள் 16 2 12
செலவு(ரூபாய்) 3000 3500 2100

 

About the author

admin

Leave a Comment