சினிமா

விவசாயம் போச்சே பாடல் வரிகள் | The Casteless Collective Songs Lyrics | Cauvery

cauvery river

 • The Casteless Collective Songs
 • ஏலே ஏலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
 • விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
 • என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
 • நான் மண்ணகிண்டும் பொழப்பு இப்போ
 • மலையேறி போச்சே
 • சோறு கொடுத்த தேசம்
 • இப்போ சுடுகாடாச்சே…
 • இது மாற பசி ஆற
 • கொண்டாடுவோம் ஓ ஓ ஓ….
 • விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
 • விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
 • நாங்க விவசாயத்தை உடமாட்டோம்
 • எங்க உயிரே போனாலும்
 • எங்க நியாத்தத்தான் நாங்க கேட்டோம்
 • இது இல்லடா வியாபாரம்.
 • நாங்க விவசாயத்தை உடமாட்டோம்
 • எங்க உயிரே போனாலும்
 • எங்க நாயத்தைத்தான் நாங்க கேட்டோம்
 • இது இல்லடா வியாபாரம்….
 • விவசாயம் விவசாயம் விவசாயம்
 • பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
 • விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
 • ஆ.. விவசாயம் பண்ணக்கூட ஒரு சொட்டு தண்ணீ இல்ல
 • பட்டினியா கிடக்கிறோம் கூலி வேல ஒன்னும் இல்ல…..
 • மண்ணுல மழையும் இல்ல விண்ணுல விதையும் இல்ல
 • கண்ணீர தொடைக்க கூட காவேரி நதியும் இல்ல…
 • சொந்தமான நிலமும் இல்ல கேட்கலானா உரிமையில்ல
 • கூலிவேல விவசாயிய பத்தி யாருக்குமே கவலையில்ல…
 • ரத்த வேர்வ சிந்தி உழைக்கிறோம் அந்த உச்சி வெயிலில
 • நாங்க வெதச்ச பயிர காப்பாத்தவும் வேற வழியில்ல
 • பயிர் வாடிப்போயி இருக்குது இந்த வறண்ட பூமில
 • இது வானம் பாத்த பூமி தான் எப்ப மாறும் வானில…
 • விவசாயம் விவசாயம் விவசாயம்
 • பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
 • விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
 • தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
 • தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
 • ஆ நிலத்துல உழைக்கிறான் தினக்கூலி விவசாயி
 • பணத்த தான் மதிக்கிறான் பணக்கார முதலாளி…
 • தள்ளுபடி செய்யுறண்டா பணக்காரன் கடன
 • விவசாயியை தள்ளுறாண்டா ஜெயிலுக்குள்ள உடனே…
 • நஞ்ச நிலத்துலதான் ஓலைக்குறவன் எல்லாம் கடனாளி
 • பஞ்ச பணமாக மாத்துறவன் இன்னைக்கு முதலாளி
 • அட இன்னும்கூட கிடைக்கல நாங்க கேட்ட மானியம்
 • அதனால தாண்டா விதைக்கள சம்பு சோள தானியம்…
 • விவசாயம் விவசாயம் விவசாயம்
 • பண்ணப்போறம் நிலைத்த வாங்கி நிலாவுல
 • விவசாயம் பண்ணக்கூட பூமியில எடம் இல்ல….
 • தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…
 • தையாரே தந்தனதானா… தையாரே தந்தனதானா…

தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (The Casteless Collective Songs)

விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே.. பாடலை எழுதி பாடியவர் பாடகர் செல்லமுத்து. இசை டென்மா இப்பாடல் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினரால் வெளியிடப்பட்ட மகிழ்ச்சி என்ற ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.

தி காசுலசு கலெட்டிவ் (The Casteless Collective) என்பது தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைக்குழு ஆகும். பா. இரஞ்சித்து தொடங்கிய நீலம் பண்பாட்டு மைம் மற்றும் மதராசு இரெக்காடுசு என்ற முத்திரையில் இடென்மாவை நிறுவனராக கொண்டு தமிழ்-இண்டி இசைக்கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரின் ஆதரவுடன் 2017 ஆம் ஆண்டில் இந்த இசைக்குழு உருவாக்கப்பட்டது.

தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்
பிறப்பிடம் தமிழ்நாடு, சென்னை
இசை வடிவங்கள் தமிழ்- இண்டி
இசைத்துறையில் 2017 – தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள் சுயாதீனமான
உறுப்பினர்கள் டென்மா
முத்து
பாசலச்சதர்
இசைவாணி
அறிவு
செல்லமுத்து
தரணி
சரத்
கௌதம்
நந்தன் கலைவாணன்
மனு கிருஷ்ணன்
சாகிப் சிங்

About the author

admin

Leave a Comment