செய்திகள்

மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள் | Budget 2019 | நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman budget 2019
Written by admin

Budget 2019 : மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.

nirmala sitharaman budget 2019

பட்ஜெட் சிறப்பம்சங்கள் (Budget 2019) :

 

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும்.

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் பயணம் செய்ய ஓருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை வழங்கப்படும்.

ரயில்வே திட்டங்களை மேம்படுத்த 2030 ம் ஆண்டில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

ரயில், பஸ் என அனைத்திற்கும் ஒரே பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

சிறு, குறு, நடுத்த தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி முதலீடு

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி

வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்

அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி முதலீடு

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரே நாடு ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்

வீட்டு வாடகை ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்படும்

பிரதம மந்திரி கர்மயோகி திட்டம் அமல்படுத்தப்படும்.

காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

சில்லறை, வணிகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

என்ஆர்ஐ முதலீடுகளுக்கு விதிகள் தளர்த்தப்படும்.

ஊடகம் மற்றும் வான்வழி சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படும்.

தொழில் துவங்குவதற்கான கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும்.

முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்.

2022 ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.

பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33,000 கி.மீ., தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும்.

2022 க்குள் 1.95 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித்தரப்படும்

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் 1,25,000 கி.மீ., சாலைகள் மேற்படுத்தப்படும்.

விவசாய துறைக்கு மண்டலம் வாரியாக முன்னுரிமை வழங்கப்படும்.

நாடு முழுவதும் 75,000 பேரை தேர்வு செய்து தொழில் பயிற்சி வழங்கப்படும்.

10,000 விவசாய உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்படும்.

விண்வெளி வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.

2024 ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர்

நீர் மேலாண்மைக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்படும்.

வரும் அக்டோபர் மாதம் காந்தி பிறந்தநாளுக்கும் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

மாணவர்களின் திறனை மேற்படுத்தவும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்.

புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

இளைஞர்களுக்கு காந்தி பீடியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும்.

தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்

சர்வதேச வேலைவாய்ப்புக்களை பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

புதிதாக உருவாகும் தொழில்களுக்கென பிரத்யேக டிவி சேனல்

சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள்

About the author

admin

Leave a Comment