செய்திகள்

தமிழக மக்களின் விழிப்புணா்வு! மக்களை ஏமாற்றும் நடிகர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி!!

நடிகா் சங்கம் நடத்தும் “நட்சத்திர கிரிக்கெட்” நடைபெறும் மைதானத்தின் கேலரிகளை பாா்க்கும் போது தமிழக இளைஞா்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே உள்ளது. ஒரு நடிகா் வந்தாலே பின்னால் செல்லும் தமிழக கூட்டம், இன்று பெரும் நடிக பட்டாளத்திற்கு கொடுத்த “அடி” வரவேற்புக்குறியது. இளைஞா்களிடமும், தமிழக மக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுவதாக தெரிகிறது.

star-cricket

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இணைந்து இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தனர். ஆனால் ரஜினி, கமலால் கூட கூட்டத்தை வரவழைக்க முடியவில்லை.

சமூக வலைத்தளம்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்த ஸ்டேடியமே காலியா இருந்ததுக்கு காரணம் என்ன? நீங்கள் கட்டிடம் கட்ட நாங்க ஏன் பாஸ் பணம் கொடுக்கணும். நடிகர்களாகிய உங்களிடம் இல்லாத பணமா எங்களிடம் உள்ளது என்று மக்கள் சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கருத்து தெரிவித்தனர். நாமல்லாம் ஃபேஸ்புக்கில் மற்றும் சமுக வலைதளங்களில் ஏற்படுத்திய விழிப்புணர்வே! இது தான் சமுக வலைதளங்களில் பலம். தண்ணீர் கலந்த பால் போன்றதுதான் சமூக வலைதளங்கள் , இதில் அன்னம் போல் நாம் தான் பிரித்துப்பார்த்து கையாளுதல் அவசியம் .

நம் கையில் உள்ள தீப்பெட்டி போன்றே சமுகவலைதளம் என்பது ! இதை வைத்து தீபம் ஏற்றுவதா ? வீட்டை எரிப்பதா ? முடிவு நம் எண்ணத்தில் என்பதைவிட நாம் பயன்படுத்துவதில் தான் உள்ளது..

socialmedia

ஊடகங்கள் துணையின்றிஅனைத்தையும் உலகுக்கு உணர்த்திவரும் சமூக வளைதளங்கள்,சப்தமின்றி இந்த உலகை ஒன்று படுத்திவிட்டது .

உலகின் எந்த மூலையில் மனிதனுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்தாலும் அது குறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடா விட்டாலும் “முகநூல்” “வாட்ஸப்”,”டிவிட்டர்” போன்ற சமூக வளைதளங்கள் மூலம் செய்திகள் காட்டுதீ போல் பரவி அனைவரையும் சென்றடைகிறது. வதந்திகளும் எளிதில் சென்றடைகிறது.

சமூக வலைதளங்கள் என்பது தனி மனிதரின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிக்கும் ஊடகமாக இருக்கிறது.

மக்களின் பணத்தைப் பறிப்பதை விரும்பாத அஜீத்

ajith

விஜயகாந்த் தலைவராக இருந்தபோதே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அஜீத் கலந்து கொள்வதில்லை. அதை ஆதரிப்பதும் இல்லை. மக்களின் பணத்தைப் பறிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறி விட்டவர் அவர். எனவே இந்த நிகழ்ச்சியையும் அவர் ஆதரிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல அவர் இன்று வரவில்லை.

அஜீத் போலவே நடிகர் விஜய்யும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல இளம் நடிகர்கள் சிம்பு, தனுஷ் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

மொத்தத்தில் மக்கள் கூட்டமும் இல்லை, பல முன்னணி நடிகர்களும் வரவில்லை என்பதால் நடிகர் சங்க நிர்வாகிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த அனைத்து மக்களுக்கும் புரட்சி இளைஞர்களுக்கும் நன்றி நன்றி நன்றி…

About the author

admin

Leave a Comment