சினிமா

எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் 2.0 படத்தின் 3D மேக்கிங் வீடியோ..!

Robo-2.0

2-o தமிழ் 3D திரைப்படம்

இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் ‘2.0’. காரணம், பெரும் பொருள் செலவில் இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் திரைப்படம் இதுதான். தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த முன்னோட்டத்தில் இளமையும், துடிப்புமாக வரும் ரஜினிகாந்த், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

2.0 ரிலீஸ் தேதி

வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம், 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் சற்று முன் யு ட்யூபில் வெளியிடப்பட்டது. 3 நிமிடம் 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், 2.ஓவை ஏன் 3டியில் எடுத்தார்கள், அதில் இருந்த சவால்கள் குறித்து ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பணியாற்றிய ஹாலிவுட் கலைஞர்கள் சிலரும் சுருக்கமாகப் பேசுகின்றனர்.

2-point-o

இதுவரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட 2.0 புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலானது. அதுமட்டுமின்றி, படம் உருவான விதம் பற்றிய வெளியிடப்பட்ட முதற்கட்ட வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உண்மையான ஹாலிவுட் தரம் என்று குறிப்பிட்டு ‘2.0’ வீடியோவைப் பகிர்ந்துவருகிறார்கள். பிரமாண்டமான அரங்குகள், கார்கள் வெடிக்கும் காட்சிகள், விளையாட்டு மைதானத்தில் சண்டைக்காட்சிகள், ரோபோக்கள் உருவான விதம், ரஜினி – அக்‌ஷ்யகுமார் இருவருடைய மேக்கப்பிற்கான மெனக்கிடல் ஆகியவை அந்த வீடியோவில் அடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 3டி பட பிடிப்பு உருவான விதம் பற்றிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டு சோஷியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2.0 ரஜினி

2.0 rajini stills

இந்த வீடியோவில் இதுகுறித்து ரஜினி பேசுகையில், “இந்தியத் திரையுலகம் கண்டிராத மாபெரும் க்ராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு குறைவில்லாத தரத்தினை இதில் காணலாம். ரசிகர்களின் ரியாக்ஷனுக்காக காத்திருக்கிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் சங்கர்

2.0 rajini still

“இப்படம் எதிர்காலங்களில் 3டியில் படம் எடுப்பதற்கான ஊக்கத்தை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தும். நிறைய தியேட்டர்கள் 3டிக்கு மாற்றப்படும் என நம்புகிறேன்” என்று இந்த வீடியோவில் இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

About the author

admin

Leave a Comment