சைவம்

Garlic Coconut Chutney Recipe In Tamil | பூண்டு தேங்காய் சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பூண்டு தேங்காய் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? தேங்காய் இருந்தால் அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். அதுவும் வெறும் 3 பொருட்களைக் கொண்டே ஒரு சுவையான சட்னியை செய்யலாம். அது தான் பூண்டு தேங்காய் சட்னி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, கஞ்சிக்கும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் – 1 கப் (துருவியது)

* வரமிளகாய் – 3-4

* பூண்டு – 3-4

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டால், சுவையான பூண்டு தேங்காய் சட்னி தயார்.

இந்த பதிவின் மூலமாக பூண்டு தேங்காய் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பூண்டு தேங்காய் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment