சைவம்

ஆலு சாட் ரெசிபி | டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!!

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.

இந்த காரசாரமான ஆலு சாட் ரெசிபியை எப்படி படிப்படியாக செய்வது என்பதை வீடியோ மற்றும் செய்முறை விளக்கத்துடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆலு சாட் ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன், ரொம்ப மிருதுவாக உள்ள உருளைக்கிழங்கை தட்டில் வைத்து இதனுடன் காரசாரமான மசாலா தூவி, இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipe By: ப்ரியங்கா த்யாகி

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 3-4 நபர்கள்

உருளைக்கிழங்கு – 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)

ஆயில் – வதக்குவதற்கு தேவையான அளவு

உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த மாங்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி புதினா சட்னி – 1/2 டேபிள் ஸ்பூன்

ஓமப் பொடி(சேவ்) – 1 சிறிய கிண்ணல் அளவிற்கு

கொத்தமல்லி இலைகள் – நறுக்கியது (அலங்காரத்திற்கு )

மாதுளை – அலங்காரத்திற்கு

1.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். இப்பொழுது சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

2.அது பொன்னிறமாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

3.அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்

4.பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்

5.பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்

6.பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்

7.இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.

8.இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் இன்னும் கலர்ஃபுல்லான ஆலு சாட் ரெசிபி ரெடி

இந்த பதிவின் மூலமாக டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment