சைவம்

Beetroot Aloo Cutlet Recipe In Tamil | பீட்ரூட் ஆலு கட்லெட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பீட்ரூட் ஆலு கட்லெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் வடை, பஜ்ஜி, பக்கோடா சாப்பிட்டு அலுத்துவிட்டதா? உங்கள் குழந்தைகள் உங்களிடம் கட்லெட் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்யுங்கள். இந்த கட்லெட் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸும் கூட. அதோடு இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுக்க ஏற்றதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* துருவிய பீட்ரூட் – 1 கப்

* வேக வைத்த உருளைக்கிழங்கு – 1

* வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் துருவிய பீட்ரூட்டை எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான ஜூஸை கையால் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் வேகர்க்கடலை, மாங்காய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் கையில் சிறிது நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் ஆலு கட்லெட் தயார்.

இந்த பதிவின் மூலமாக பீட்ரூட் ஆலு கட்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பீட்ரூட் ஆலு கட்லெட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment