சைவம்

Besan Chutney Recipe In Tamil | Besan Chutney Recipe : கடலை மாவு சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Besan Chutney Recipe : கடலை மாவு சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யும் ஐடியாவில் உள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இன்று நாம் விரைவில், அதே சமயம் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான சட்னி பற்றி பார்க்கப் போகிறோம். அது தான் கடலை மாவு சட்னி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (கீறியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* சர்க்கரை – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் கடலை மாவை சேர்த்த 2 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

* அடுத்து நீர் ஊற்றி நன்கு கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கடலை மாவு சட்னி தயார்.

இந்த பதிவின் மூலமாக Besan Chutney Recipe : கடலை மாவு சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Besan Chutney Recipe : கடலை மாவு சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment