சைவம்

Cheese Garlic Bread Recipe In Tamil | சீஸ் கார்லிக் பிரட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சீஸ் கார்லிக் பிரட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் சீஸ் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய சீஸ் கார்லிக் பிரட் செய்யுங்கள். இந்த சீஸ் கார்லிக் பிரட் நல்ல ருசியாக இருப்பதோடு மட்டுமின்றி, வயிற்றையும் நிரப்பும். குறிப்பாக சீஸ் கார்லிக் பிரட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பிரட் துண்டுகள் – 5

* எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 2 பல் (துருவியது)

* உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1/4 டீஸ்பூன்

* மொஸெரெல்லா சீஸ் – 1 கப் (துருவியது)

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் ஆலிவ் ஆயில், துருவிய பூண்டு, உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் பிரட் துண்டுகளின் மீது இந்த எண்ணெயைத் தடவ வேண்டும்.

* பின்பு அதன் மேல் துருவிய மொஸெரெல்லா சீஸ் தூவி விட வேண்டும்.

* பிறகு ஒரு தோசைக் கல் அல்லது தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும், இந்த பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக கல்லில் வைத்து குறைவான தீயில், சீஸ் உருகும் வரை வைத்து எடுத்தால், சுவையான சீஸ் கார்லிக் பிரட் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக சீஸ் கார்லிக் பிரட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சீஸ் கார்லிக் பிரட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment