சைவம்

Christmas Special: White Christmas Slice Recipe In Tamil | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளது. அது தான் ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி. இதற்கு அடுப்பில் எல்லாம் வேலை அதிகமாக இருக்காது. ஆனால் இதற்கான பொருட்கள் கிடைப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அந்த பொருட்கள் ஆன்லைனில் கிடைக்கும்.

இப்போது ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: சிம்பிளான… கேரட் வால்நட் பிரட்

தேவையான பொருட்கள்:

* உலர்ந்த துருவிய தேங்காய் (Dessicated Coconut) – 1 கப்

* பால் பவுடர் – 1/4 கப்

* அரிசி கிறிஸ்பீஸ் (Rice Krispies) – 1/2 கப்

* சர்க்கரை பவுடர் – 1/2 கப்

* விருப்பமான உலர் பழங்கள் மற்றும் டூட்டி ஃபுரூட்டி – 1/4 கப்

* வெண்ணெய் – 1/4 கப்

* தேங்காய் எண்ணெய் – 1/8 கப்

செய்முறை:

* ஒரு பௌலில் உலர்ந்த துருவிய தேங்காய், பால் பவுடர் மற்றும் அரிசி கிறிஸ்பீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் சர்க்கரை பவுடர், உலர்ந்த பழங்களில் பாதியைப் போட்டு மீதியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* பிறகு ஒரு கரண்டியால் கலவையை நன்கு கிளறி விடுங்கள்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* இப்போது இந்த வெண்ணெயை பௌலில் உள்ள கலவையில் ஊற்றி, நன்கு கரண்டியால் கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது ஒன்றுசேராமல் உதிரியாகவே இருந்தால், மேலும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.

* அதன் பின் அதை ஒரு ட்ரேயில் போட்டு பரப்பி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின் மேலே எஞ்சிய உலர்ந்த பழங்களை பரப்பி, மீண்டும் தட்ட வேண்டும்.

* பின் அந்த ட்ரேயை ஒரு க்ளிங் வ்ராப்பர் (Cling Wrap) கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் சதுர துண்டுகளாக கத்தி பயன்படுத்தி வெட்டினால், சுவையான ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி தயார்…

IMAGE COURTESY

MOST READ: டூட்டி ஃபுரூட்டி கப் கேக்

இந்த பதிவின் மூலமாக கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment