சைவம்

தீபாவளி ஸ்பெஷல் கம்பு முறுக்கு Diwali Special Kambu Murukku Recipe In Tamil |

diwali murukku
Written by admin

Diwali Murukku: நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் பலகாரங்களை செய்வீர்களா? முக்கியமாக முறுக்கு செய்வீர்களா? அப்படியானால் இந்த வருட தீபாவளிக்கு சற்று வித்தியாசமாக கம்பு முறுக்கு செய்யுங்கள். இயற்கையாகவே கம்பு நல்ல சுவையைக் கொண்டது. அதைக் கொண்டு செய்யும் முறுக்கும் நிச்சயம் அற்புதமான சுவையுடன் இருக்கும். இந்த முறுக்கு செய்ய தேவையான கம்பு மாவை அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கும். அதோடு இந்த முறுக்கு ஆரோக்கியமானதும் கூட.

தேவையான பொருட்கள்:

* கம்பு மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* கடலை மாவு – 1/8 கப்

* பொட்டுக்கடலை மாவு – 1/8 கப்

* உருக்கிய வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சூடான எண்ணெய் – 1 டீஸ்பூன்

* எள்ளு விதைகள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

Diwali Murukku செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து மாவுடன் எள்ளு விதைகள், மிளகாய் தூள், உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதை கையால் ஒருமுறை கையால் கிளறிவிடுங்கள். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில்
* பிறகு அதை வேண்டிய டிசைனில் முறுக்கு போன்று ஒரு துணி/கரண்டியின் மேல் பிழிய வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு முறுக்கு தயார். இதுப்போன்று அனைத்து மாவையும் முறுக்குகளாக பிழிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவின் மூலமாக தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment