அசைவம்

Egg Omelette Curry Recipe | ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு

Egg Omelette Curry Recipe
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு (Egg Omelette Curry Recipe) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அப்படியானால் கீழே முட்டை ஆம்லெட் குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Egg Omelette Curry Recipe தேவையான பொருட்கள்:

* முட்டை – 4

* உப்பு – தேவையான அளவு

* மிளகுத் தூள் – தேவையான அளவு

முட்டை ஆம்லெட் குழம்பிற்கு.

* வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

* மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – தேவையான அளவு

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – ஒரு டீஸ்பூன்

* பட்டை – ஒரு துண்டு

* ஏலக்காய் – 3

ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து, அப்படியே ரோல் போன்று சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பிறகு ஜாரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை தூவி, பச்சை வாசனை போக வேக வைக்கவும்.

* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, எண்ணெய் பிரிய கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் அதில் ஆம்லெட் துண்டுகளைப் போட்டு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆட்லெட் குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக ருசியான  முட்டை ஆம்லெட் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… முட்டை ஆம்லெட் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment