சைவம்

Ganesh Chaturthi 2022: Peanut Ladoo Recipe In Tamil | வேர்க்கடலை லட்டு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வேர்க்கடலை லட்டு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. விநாயகரின் பிறந்தநாளையொட்டி பலரும் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். விநாயகருக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு போன்றவை மிகவும் பிடிக்கும். இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு லட்டு செய்து கொடுக்க விரும்பினால், வேர்க்கடலை லட்டு செய்து கொடுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* வேர்க்கடலை – 1 கப்

* வெல்லம் – 1/4 கப்

செய்முறை:

* முதலில் வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் வெல்லத்தைப் போட்டு மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்ததை லட்டு போன்று உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக அதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவின் மூலமாக வேர்க்கடலை லட்டு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வேர்க்கடலை லட்டு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment