செய்திகள்

கூகிள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் – google birthday surprise spinner

இன்றைய கூகுள் டூடுல் 19வது கூகுள் பிறந்தநாள் தினத்தை ( Google Birthday ) முன்னிட்டு சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுல் ஒன்றை தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

google birthday

உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுலை வெளியிட்டுள்ளது.

google birthday surprise spinner

கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் விளையாடுவது எப்படி ?

கூகுள் இணையதள தேடுதலின் மஹாராஜா என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணியில் உருவான கூகுள் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதனை கொண்டும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.

இந்த சிறப்பு டூடுல் ஸ்பின்னர் போல வழங்கப்பட்டுள்ளதால், அதனை நாம் சுழற்றும்போது, கூகிள் முன்பு வெளியிட்ட 44வது ஆண்டு விழா ஹிப் ஹாப் டூடுல், கிரிக்கெட் போட்டி, ஆஸ்கர் ஃபிஷிங்கர் டூடுல், மூச்சுபெயர்ச்சி உட்பட ஸ்னேக் கேம் என பலவற்றை கொண்டதாக வந்துள்ளது.

உங்களுடைய மொபைல் அல்லது டெஸ்க்டாப் வழியாக கூகுள் முகப்பினை அனுகி க்ளிக் செய்த பின்னர் அதில் தோன்றுகின்ற ஸ்பின்னரை சுழற்றி விளையாடுங்கள் , அதில் வருகின்ற பக்கத்தை கிளிக் செய்யலாம் அல்லது மீண்டும் ஸ்பின்னரை சுழற்றலாம். மேலும் கூகுள் ஸ்னேக் கேமை விளையாடுவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் –> https://goo.gl/சிஸ்ஜ்ப்ர

 

 

About the author

admin

Leave a Comment