சைவம்

Macaroni Pasta Recipe | சுவையான… மக்ரோனி பாஸ்தா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… மக்ரோனி பாஸ்தா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் ரொம்ப பிடிக்குமா?
இது ஒரு இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா. இப்போது இந்த மக்ரோனி பாஸ்தாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைக்கு எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மக்ரோனி பாஸ்தா – 1 கப்

* பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்

* நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்

* நறுக்கிய தக்காளி – 1/2 கப்

* நறுக்கிய குடைமிளகாய் – 1/4 கப்

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சீஸ் – சிறிது (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாப் பொடிகள்:

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கறி மசாலா பொடி – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* பிட்சா சீசனிங் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் பாஸ்தாவைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்க வேண்டும்.

* பின் குடைளிமகாய் சேர்த்து, கறி மசாலா, கரம் மசாலா, மிளகாய் பொடியையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து பிட்சா சீசனிங் மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர பிரட்டி விட்டு இறக்கி, மேலே துருவிய சீஸைத் தூவினால், சுவையான மக்ரோனி பாஸ்தா தயார்..!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக சுவையான… மக்ரோனி பாஸ்தா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… மக்ரோனி பாஸ்தா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment